Regional01

மேற்குவங்க சம்பவத்தை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

மேற்கு வங்கத்தில் நிகழும் தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தினர் நேற்று தங்களது வீடுகளில் பதாகை ஏந்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி உறுப்பினர்கள், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் மீது மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் நடத்தும் தாக்குதலைக் கண்டித்தும், மேற்கு வங்கத்தில் நடைபெறும் வன்முறையைத் தடுக்க கோரியும், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாத்து நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி, நிர்வாகிகள், உறுப்பினர்கள் தங்களது வீடுகளில் கொடி, பதாகை ஏந்தி இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT