Regional03

கரோனா ஊரடங்கு காலத்தில் மக்களுக்காக பணியாற்றுவோம் : எம்எல்ஏ டி.கே.ஜி.நீலமேகம் உறுதி

செய்திப்பிரிவு

கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கின் போது பணியாற்றியது போலவே, தற்போதும் மக்களுக் காக பணியாற்றுவோம் என தஞ்சாவூர் தொகுதி எம்எல்ஏ டி.கே.ஜி.நீலமேகம் தெரிவித்தார்.

தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் பொதுமக்களுக்கு நேற்று முகக் கவசம் வழங்கிய அவர், பின் னர் செய்தியாளர்களிடம் கூறியது:

கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தப் பாதிப்பிலிருந்து விடுபட அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி, முகக்கவசம் வழங்கப்பட்டு வருகிறது.

14 நாட்களுக்கு அரசு அறிவித் துள்ள முழு ஊரடங்குக்கு வணி கர்களும், பொதுமக்களும் ஒத்து ழைப்பு அளிக்க வேண்டும். இந்த 14 நாட்களுக்கு ஒத்துழைப்பு தந்தால்தான் எதிர்காலத்தில் இந்நோயை ஒட்டுமொத்தமாக ஒழிக்க முடியும். கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சமயத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோதே, மக்களுக்காக பல்வேறு பணிகளைச் செய்தோம். இப்போது, தமிழக முதல்வர் ரேஷன் கார்டுதாரர்களுக்கு முதல் தவணையாக தலா ரூ.2,000 வழங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நாங்களும் கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கில் பணியாற்றியதுபோலவே, தற் போதும் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம் என்றார்.

இந்நிகழ்ச்சியில், திமுக மாநகர துணைச் செயலாளர்கள் நீலகண்டன், சிந்தனைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT