Regional01

சாலை விபத்தில் : இளைஞர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ராட்டிணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுல் (22). இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். கோகுல், ராட்டிணமங்கலம் கிராமத்தில் இருந்து இரும்பேடு கிராமத்துக்கு இரு சக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் சென்றார். அப்போது இரு சக்கர வாகனம் மீது செய்யாறில் இருந்து ஆரணி நோக்கி சென்ற லாரி மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கோகுல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஆரணி கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT