பிரபல நடிகை கங்கனா ரனாவத்துக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கங்கனா வெளயிட்டுள்ள பதிவில், “கடந்த சில நாட்களாக சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்ந்தேன். கண்களில் லேசான எரிச்சல் இருந்தது. இமாச்சலில் உள்ள சொந்த ஊருக்கு செல்வதற்காக கரோனா பரிசோதனை செய்து கொண்டேன். இதில் கரோனா பாசிட்டிவ் என முடிவு வந்துள்ளது.
என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். இந்த வைரஸ் என உடலில் கொண்டாட்டத்துடன் இருந்தது எனக்குத் தெரியாமலே போய்விட்டது. அதை நான்எப்படியும் அடித்து நொறுக்கிவிடுவேன். மக்களே எதையும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த விடாதீர்கள். நீங்கள் பயந்தால் அது உங்களை மேலும் பயமுறுத்தும். நாம் அனைவரும் சேர்ந்து கரோனாவை தகர்ப்போம். அதிக ஊடக வெளிச்சம் பெற்றுள்ள இது, சிறிதுகால காய்ச்சலை தவிர வேறொன்றுமில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டதை தொடர்ந்து, கங்கனா அண்மையில் ட்விட்டரில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பான ட்வீட்களுக்காகவும் அவர் அண்மையில் கேலி செய்யப்பட்டார்.