TNadu

ராமதாஸிடம் வாழ்த்து பெற்றார் முதல்வர் ஸ்டாலின் :

செய்திப்பிரிவு

பாமக நிறுவனர் ராமதாஸிடம் தொலைபேசி வழியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வாழ்த்து பெற்றார்.

இது தொடர்பாக பாமக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முதல்வர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸைதொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டதற்காக வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார்.

நேரில் சந்தித்து வாழ்த்து பெற விரும்பியதாகவும், கரோனா பரவலைக் கருத்தில்கொண்டு தொலைபேசியில் பேசுவதாகவும் ஸ்டாலின் கூறினார். ஸ்டாலினுக்கு தமது உளமார்ந்த வாழ்த்துகளை ராமதாஸ் தெரிவித்துக் கொண்டார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT