Regional01

மாநகரில் இன்று நடக்கும் மருத்துவ முகாம்கள் : மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு :

செய்திப்பிரிவு

கோவை: கோவை மாநகரில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு இடங்களில் இன்று மருத்துவ முகாம்கள் நடக்க உள்ளன.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், கோவையில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், தினமும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்று நடக்கும் முகாம்கள் குறித்து மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வடக்கு மண்டலம்- 4-வது வார்டில் சுப்பிரமணியம்பாளையம், 3-வது வார்டில் பாலசுப்பிரமணியன் நகர், ஜி.என்.மில்ஸ், 41-வது வார்டில் கணபதி மாநகர், லட்சுமி நகர், தெற்கு மண்டலம் - 95-வது வார்டில் போத்தனூர் அஞ்சல் நிலையம் அருகில், 94-வது வார்டு பார்க்லைன், 93-வது வார்டு மின் நகர், 76-வது வார்டு முத்தைய உடையார் வீதி, 77-வது வார்டு ராமமூர்த்தி ரோடு, 86-வது வார்டு ஆசாத் நகர், 90 -வது வார்டு கோவைப்புதூர், கிழக்கு மண்டலத்தில் 69-வது வார்டு பெரியார் நகர் ஆகிய இடங்களில் மருத்துவ முகாம்கள் நடக்கின்றன. மேலும், மேற்கு மண்டலம் 17-வது வார்டு கல்வீரம்பாளையம், மத்திய மண்டலத்தில் 53-வது வார்டு நந்தகோபால் வீதி, 68-வது வார்டு என்.ஏ.தேவர் வீதி, 80-வது வார்டு உப்பார வீதி, 25-வது வார்டு தேவாங்கப்பேட்டை, 84-வது வார்டு கெம்பட்டி காலனி, 49-வது வார்டு சம்பத் வீதி ஆகிய இடங்களிலும் இன்று மருத்துவ முகாம்கள் நடக்கின்றன,’’ எனக் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT