ஓமலூர் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் தொடர்பாக சேலம் ஆட்சியர் ராமன் ஆய்வு செய்தார். 
Regional02

சேலம் மாவட்டத்தில் 7-ம் தேதி வரை - 8.21 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை: ஆட்சியர் தகவல் :

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் கடந்த 7-ம் தேதி வரை மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 569 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப் பட்டுள்ளது. இதில், 46 ஆயிரத்து 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டது என சேலம் ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா, ஓமலூர்அரசு மருத்துவ மனை, கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி ஆண்கள் தங்கும் விடுதி ஆகிய இடங்களில் உள்ள கரோனா தனிமைப் படுத்தும் மையங்கள் மற்றும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்டவைகளை ஆட்சியர் ராமன் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, தனிமைப் படுத்தப்பட்டவர் களுக்கு செய்யப் பட்டுள்ள வசதிகள், மருத்துவ சிகிச்சை முறைகள் தொடர்பாக ஆட்சியர் கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது:

சேலம் மாவட்டத் தில் கரோனா தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக கடந்த 7-ம் தேதி வரை மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 569 பேருக்கு சளித் தடவல் முறையில் கரோனாபரிசோதனை மேற்கொள்ளப் பட்டன. இதில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 45 ஆயிரத்து 709 பேருக்கும், பிற மாவட்டங் களைச் சேர்ந்த 330 பேர் என மொத்தம் 46 ஆயிரத்து 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டது.

இவர்களில் 7-ம் தேதி வரை மொத்தம் 41 ஆயிரத்து 679 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 3 ஆயிரத்து 771 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, நலப் பணிகள் இணை இயக்குநர் மலர்விழி வள்ளல், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செல்வகுமார், மாநகர நல அலுவலர் பார்த்திபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT