Regional02

ஊரக தொழில்துறை அமைச்சர் - அண்ணா நினைவு இல்லத்தில் மரியாதை :

செய்திப்பிரிவு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் ஆலந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் தா.மோ.அன்பரசன் ஊரக தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

அவர் நேற்று காஞ்சி அண்ணா நினைவு இல்லம் வந்தார். இல்லத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவருடன் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்டஇயக்குநர் ஜெயசுதா, மக்களவைஉறுப்பினர் செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT