தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழினம் கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண திமுக ஆட்சிக்கு விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலினுக்கு விஐடி வேந்தரும் தமிழியக்க நிறுவன தலைவருமான கோ.விசுவநாதன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:
அரசியலில் ஐம்பதாண்டு அயராத உழைப்பு, மிசா நெருக்கடி கால சிறைவாசம், திராவிடஇயக்க கொள்கைகளில் பற்றுறுதி,தேர் வடமாக அறிவாலயத்திலிருந்து புறப்பட்ட திராவிட தேராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிகோட்டையை சென்றடைந்திருக்கிறார்.
2021 தமிழக சட்டபேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறார். தந்தை பெரியார் கண்ட சீர்திருத்தக் கனவுகளை நனவாக்கிய பேரறிஞர் அண்ணா, தமிழை செம்மொழி சிம்மாசனத்தில் அமர்த்திய சமத்துவபுர நாயகர் கலைஞர் உட்பட திராவிட இயக்க முன்னோடிகள் பாதங்களால் போட்டபாதையில், முதல்வர் பொறுப்பில் மு.க.ஸ்டாலின் பயணம் தொடர்ந்திட மனமார்ந்த வாழ்த்துகள்.
உயிர்க்கவசம்
இவ்வாறு வாழ்த்து செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.