Regional02

கடத்தி சென்று : திருமணம் செய்த இளைஞர் கைது :

செய்திப்பிரிவு

நெய்வேலி அருகே பிளஸ் 1 மாணவியை திருமணம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

நெய்வேலி அருகே உள்ள மீனாட்சிபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன் (19). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்1 மாணவி ஒருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாணவியின் பெற்றோர் கேரளாவில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்துவருகின்றனர். மாணவி அதே பகுதியில் உள்ள அவரது பாட்டியுடன் வசித்து வந்தார்.

கடந்த 3 மாதத்துக்கு முன்பு மாணவியின் பாட்டி வேலைக்கு சென்றதை அறிந்த மாதேஸ்வரன், மாணவியின் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு தனியாக இருந்த மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தற்போது அந்த மாணவி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இதுபற்றி அறிந்த மாதேஸ்வரன், மாணவியை மீனாட்சி பேட்டையில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு அழைத்து சென்றுதிருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர் கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்தனர்.

பின்னர் நடந்த சம்பவம் குறித்து மாணவியிடம் கேட்டறிந்தனர். இதனையடுத்து மாணவியின் தந்தைகொடுத்த புகாரின் பேரில் நெய்வேலி அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் இரவு மாதேஸ்வரனை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT