Regional02

போலீஸாருக்கு பாராட்டுச் சான்றிதழ் :

செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களவை தொகுதி இடைத்தேர்தல் மற்றும் 6 சட்டப்பேரவை தேர்தல் அசம்பாவிதம் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

இதைத்தொடர்ந்து தேர்தல் பணியில் சிறப்பாக பங்களிப்பு ஆற்றிய காவல்துறை அதிகாரிகள், மற்றும் போலீஸாருக்கு எஸ்.பி.பத்ரி நாராயணன் பாராட்டு தெரிவித்தார். மேலும், சிறப்பாக செயல்பட்ட போலீஸாருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அவர் வழங்கினார். தேர்தல் பணியில் ஈடுபட்ட முன்னாள் ராணுவத்தினரின் பணிக்கும் பாராட்டு தெரி விக்கப்பட்டது.

மேலும், இதுபோன்ற முக்கியமான தருணங்களில் காவல்துறையினர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

SCROLL FOR NEXT