புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியைச் சேர்ந்தவர் ராமையா மகன் மோகன்(50). இவர், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரிந்து வந்தார். இவரும், ஆலங்காடு கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் தமிழரசனும்(31) காரில் திருச்சிக்கு சென்றுவீட்டு நேற்று அதிகாலை ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். காரை தமிழரசன் ஓட்டியுள்ளார்.
திருவரங்குளம் அருகே வம்பன் பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி சாலையோர மரத்தின் மீது கார் மோதியதில் அந்த இடத்திலேயே மோகன் உயிரிழந்தார். காயமடைந்த தமிழரசன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஆலங்குடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல, வடகாடு அருகே புளிச்சங்காடு கைகாட்டி அருகே அண்ணா நகரைச் சேர்ந்தவர் எஸ்.நைனார்(45). இவர், நேற்று அதிகாலையில் புளிச்சங்காடு கைகாட்டியில் இருந்து அண்ணா நகருக்கு நடந்து சென்றபோது வீட்டின் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். இது குறித்து வடகாடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.