புதுக்கோட்டை எஸ்.பி அலுவலகத்தில் நேற்று கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார் ஏடிஜிபி அமரேஷ் புஜாரி. உடன், எஸ்.பி எல்.பாலாஜி சரவணன் உள்ளிட்டோர். 
Regional02

கரோனா பரவல் தடுப்பு குறித்து புதுக்கோட்டையில் ஏடிஜிபி ஆய்வு :

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு குறித்து எஸ்.பி அலுவலகத்தில் ஏடிஜிபி நேற்று ஆய்வு செய்தார்.

கரோனா பரவலைத் தடுப்பதற் காக திருச்சி மத்திய மண்டலத் துக்கு உட்பட்ட 5 மாவட்டங்களுக்கு காவல் துறையின் சார்பில் சிறப்பு அலுவலராக கூடுதல் காவல் துறை இயக்குநர் அமரேஷ் புஜாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத் தில் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது, ஊரடங்கு காலத் தில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள், மருத்துவமனை களில் ஆக்சிஜன் இருப்பு, மருத் துவமனை மற்றும் கவனிப்பு மையங்களில் உள்ள படுக்கைகள், ஆர்டிபிசிஆர் பரிசோதனை, தடுப்பூசி விழிப்புணர்வு ஆகியவை குறித்து ஆய்வு செய்தார். மேலும், அங்குள்ள கரோனா கட்டுப்பாட்டு அறையையும் பார்வையிட்டார். அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT