Regional03

சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் - ரூ.55 லட்சம் மதிப்பில் 6 வென்டிலேட்டர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கல் :

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், சென்னையில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவமனைக்கும் 6 வென்டி லேட்டர்களை சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூ.55 லட்சம் மதிப்பிலான 6 வென்டிலேட்டர்களை தலா 3 வீதம் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், சென்னை கே.கே.நகரிலுள்ள இஎஸ்ஐசி மருத்துவமனைக்கும் தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.இவற்றை, சென்னை இஎஸ்ஐசி மருத்துவமனை டாக்டர் சிரிஸ் சவானிடம், சாஸ்த்ரா பல்கலைக்கழக துணைவேந்தர் வைத்திய சுப்பிரமணியம் வழங்கினார்.

அதேபோல, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ், மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை முதல்வர் ரவிக்குமார் ஆகியோரிடம், பல்கலைக்கழக இயந்திரவியல் துறை முதல்வர் புகழேந்தி வழங்கினார். இந்த வென்டிலேட்டர்களுடன், ஆக்சிஜன் ஓட்ட மீட்டர்களும், ஆக்ஸி மீட்டர்களும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளன. 

SCROLL FOR NEXT