தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் அறிக்கை: தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் இன்று (9-ம் தேதி) காலை 9 மணி முதல் 11 மணி வரை 58-வது வார்டு மகாலெட்சுமி நகர் மெயின், 3-வது வார்டு ராஜகோபால் நகர்- 5வது தெரு மெயின், 18-வது வார்டு லூர்தம்மாள்புரம் சர்ச், 48-வது வார்டு கணேசன் காலனி, பத்திரகாளியம்மன் கோவில் அருகே, 45-வது வார்டு சந்தி விநாயகர் கோவில் தெரு பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடக்கிறது.
இதே போல், காலை 11 மணி முதல் 1 மணி வரை 55-வது வார்டு வ.உ.சி. நகர் மெயின், 3-வது வார்டு பால்பாண்டி நகர் 1-வது தெரு மெயின், 12-வது வார்டு முத்துகிருஷ்ணாபுரம் மெயின், 50-வது வார்டு பெரியசாமி நகர் மெயின், 29-வது வார்டு மேலசண்முகபுரம் கர்ணன் காம்பவுண்ட் ஆகிய பகுதிகளிலும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை 59-வது வார்டு அபிராமி நகர் பார்க் அருகே, 3-வது வார்டு வி.எம்.எஸ் நகர், 1-வது வார்டு அய்யாசாமி காலனி அரசு பள்ளி அருகே, 48-வது வார்டு அமுதா நகர் மெயின், 32-வது வார்டு மாதா தோட்டம் மெயின் ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
கோவில்பட்டி நகராட்சியில் காலை 9 மணி முதல் 11 மணி வரை வ.உ.சி நகர் பகுதியிலும், காலை 11 மணி முதல் 1 மணி வரை ஜோதி நகர் பகுதியிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை நடராஜபுரம் பகுதியிலும், காயல்பட்டினம் நகராட்சியில் காலை 9 மணி முதல் 11 மணி வரை பிலோமி நகர் பகுதியிலும், காலை11 மணி முதல் 1 மணி வரை பிரசாந்த் நகர் பகுதியிலும், பகல்
2 மணி முதல் 4 மணி வரை ஜீவா நகர் பகுதியிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் காலை 9 மணி முதல் 11 மணி வரை புதுக்கோட்டை அ. சண்முகபுரம், முக்காணி ரவுண்டானா, கீழசெக்காரக்குடி, வடக்கு காரசேரி, மடத்துவிளை மேற்கு, ராஜமன்னியாபுரம், குரங்கனி, பெத்தானியாநகர், நாசரேத், பரதர் நகர், கிருஷ்டியா நகரம், அன்பின் நகரம், புத்தன்தருவை, சிந்தாமணி நகர், ராமநாதபுரம், ஒ.துரைசாமிபுரம், ஓணமாக்குளம், எம்.கோட்டூர் ஆகிய பகுதிகளிலும், 11 மணி முதல் 1 மணி வரை குலையன்கரிசல், முக்காணி வடக்கு, பொட்டலூரணி, செட்டிமல்லன்பட்டி, மூலக்கரை, வடக்கு சுப்பிரமணியபுரம், சேதுக்குவைத்தான், பிரகாசபுரம், நாசரேத், புதுமனை, ஆண்டிவிளை, சுண்டன்கோட்டை, செட்டிவிளை, வடக்கு இலுப்பையூரணி, புதுப்பட்டி, சொக்கலிங்கபுரம், முறம்பன், கே.கே.பட்டி ஆகிய பகுதிகளிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை உமரிகோட்டை, முக்காணி தெற்கு, தெய்வசெயல்புரம், சீத்தாக்குளம், கீழ லட்சுமிபுரம், சண்முகபுரம், நாலுமாவடி, மில்ரோடு, நாசரேத், முருகன் காலனி, பெருமாள்புரம், மணிநகர், பெரியதாழை, ராஜிவ் நகர், ஆவுடையம்மாள்புரம், தொப்பம்பட்டி, மணியாச்சி, முத்தலாபுரம் ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.