TNadu

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு :

செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான அனல்மின் நிலையத்தில், தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் மூலம், 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குள்ள 2, 3, 4-வது அலகுகளில் பழுது ஏற்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் 3 அலகுகளில் பழுது ஏற்பட்டுள்ளதால் 630 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அனல்மின் நிலையத்தில் 1 மற்றும் 5-வது அலகுகளில் மட்டும் தற்போது மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பழுதடைந்த அலகுகளை சரிசெய்யும் பணியில் பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஓரிரு நாளில் பழுதுகள் சரிசெய்யப்பட்டு மின் உற்பத்தி சீராகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT