TNadu

சேலம் அரசு மருத்துவமனையில் - :

செய்திப்பிரிவு

சேலம் அரசு மருத்துவமனையில் 29 ரெம்டெசிவிர் மருந்து மாயமான விவகாரத்தில் ஊழியர் களின் வாட்ஸ்-அப் பதிவு கொண்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் அரசு மருத்துவமனை யில் கரோனா தொற்று சிகிச்சை பிரிவில் இருந்த 29 ரெம்டெசிவிர் மருந்து இரு தினங்களுக்கு முன்னர் காணாமல் போனது. இதுகுறித்து சேலம் செவ்வாய்ப்பேட்டை புறக்காவல் நிலையத்தில் மருத்துவமனை நிர்வாகம் புகார் அளித்தது.

இதையடுத்து சேலம் டவுன் காவல் உதவி ஆணையர் மணி கண்டன், காவல் ஆய்வாளர் ராஜசேகர் தலைமையிலான போலீஸார், கரோனா சிகிச்சைப் பிரிவில் பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், தூய் மைப் பணியாளர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.

செல்போன் பறிமுதல்

இதில் சந்தேகத்தின்பேரில் 3 பேரின் செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்து விசாரித்தனர். இதில், ஒரு போனில் வாட்ஸ்அப் தகவலில் ‘29 ரெம்டெசிவிர் மருந்து பாட்டில் எடுத்து வைக்கப்பட்டுள்ளது. வந்து வாங்கி செல்’ என பதிவிடப்பட்டிருந்தது.

இதையடுத்து தொடர்புடைய ஊழியரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT