காவேரிப்பட்டணத்தில் ஒரே தெருவில் 15 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பேரூராட்சிக்கு உட்பட்ட அப்பாசாமி நகர் பகுதியில், 15-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, தெருக்களை அடைத்துள்ளனர். இதையடுத்து, வட்டார மருத்துவ அலுவலர் தாமரைச்செல்வி தலைமையில், மருத்துவர்கள் சோமசுந்தரம், திருலோகேஷ், சுகாதார ஆய்வாளர் கந்தசாமி உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அங்குள்ள மக்களுக்கு கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கினர். மேலும் அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதில், செயல் அலுவலர் சாம்கிங்ஸ்டன் மற்றும் சுகாதார பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.