Regional02

தடையை மீறி செயல்பட்ட 10 வணிக நிறுவனங்களுக்கு ‘சீல்’ :

செய்திப்பிரிவு

சேலம் மாநகராட்சிப் பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 6-ம்தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, மதியம் 12 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு விதி முறைகள் பின்பற்றப்படுவது குறித்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் (6-ம் தேதி) மாநகராட்சி அதிகாரிகள் மாநகரம் முழுவதும் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது, முகக்கவம் அணியாத 44 தனி நபர்களுக்கு தலா ரூ.200 அபராதம், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 63 சிறு வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ.500 அபராதமும், 39 பெரிய நிறுவனங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

புதிய கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட 10 வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட துடன், அந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் மூடி ‘சீல்’ வைத்தனர். இதேபோல், சேலம் புதிய பேருந்து நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அரசு, தனியார் பேருந்துகளில் முகக்கவசம் அணியாமல் பணியாற்றிய 4 நடத்துநர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்தனர்.

தொடர்ந்து சேலம் மாநகராட்சி பகுதிகளில் ஆய்வு செய்து விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT