Regional02

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று - காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் அறிக்கை: தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு காய்ச்சல்பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று(ஏப்.8) தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் காலை 9 மணி முதல் 11 மணி வரை முத்தையாபுரம் வடக்கு தெரு கேடிகே பள்ளி, ராஜகோபால் 1-வது தெரு மெயின், பொன் சுப்பையா நகர் மெயின், பிரையண்ட் நகர் 3-வது தெரு கிழக்கு காது கேளாதோர் பள்ளி, வண்ணார் 4-வது தெரு மாநகராட்சி பள்ளி பகுதிகளிலும், காலை 11 மணி முதல் 1 மணி வரை முத்தையாபுரம் கீழத்தெரு, பாரதி நகர் மெயின் பேருந்து நிலையம் அருகில், திரவியபுரம் மெயின், தபால் தந்தி காலனி வார்டு அலுவலகம், லயன்ஸ் டவுன் சர்ச் பகுதிகளிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை கணேஷ்நகர் பிள்ளையார் கோயில் அருகில், அன்னை தெரசா நகர் மெயின், அழகேசபுரம் அங்கன்வாடி மையம், போல்டன்புரம் 2-வது தெரு மெயின், பாத்திமா நகர் சர்ச் பகுதிகளிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறும்.

கோவில்பட்டி நகராட்சியில் காலை 9 மணி முதல் 11 மணி வரைஅன்னை தெரசா நகர், வக்கீல் தெரு பகுதியிலும், காலை 11 மணிமுதல் 1 மணி வரை ராஜீவ் நகர், சுப்ரமணியபுரம் பகுதியிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை இலுப்பையூரணி, ராம்நகர் பகுதியிலும், காயல்பட்டினம் நகராட்சியில் காலை 9 மணி முதல் 11 மணி வரை பிலோமி நகர் பகுதியிலும், காலை 11 மணி முதல் 1 மணி வரை பிரசாந்த் நகர் பகுதியிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை ஜீவா நகர் பகுதியிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் காலை9 மணி முதல் 11 மணி வரை முடிவைத்தானேந்தல், தளவாய்புரம், வல்லக்குளம், கீழபுத்தனேரி, வீரமாணிக்கம்தட்டு, ஆறுமுகநேரி சன்னதி தெரு, மளவராயநத்தம், எள்ளுவிளை, தாண்டவன்காடு, அடையல், செட்டியார் தெற்கு தெரு, காமநாயக்கன்பட்டி, பிள்ளையார் நத்தம், அக்காநாயக்கன்பட்டி, பி.சின்னயாபுரம் பகுதிகளிலும், 11 மணி முதல் 1 மணி வரைகே.புதூர், செம்படி, சேரகுளம்,சென்னல்பட்டி, ஆறுமுகநேரி எஸ்.எஸ்.கோயில் முத்தாரம்மன் கோயில் தெரு, நாசரேத்,வாட்டான்விளை - பரமன்குறிச்சி, ரெங்கநாதபுரம், ஆறுமுகநேரி காமராஜ் நகர், எட்டுநாயக்கன்பட்டி, வேலிடுபட்டி, கொடியன்குளம், பி.ஜெகஜீவபுரம் பகுதிகளிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரைகட்டாலன்குளம், இடையர்காடு, செய்துங்கநல்லூர், கந்தசாமிபுரம், அம்மன்புரம் - சோனகன்விளை, தேமான்குளம், கரையாடியூர், சீர்காட்சி, வாகைவிளை - லெட்சுமிபுரம், பொத்தகாலான்விளை, தங்கம்மாள்புரம், கே.குமரெட்டியாபுரம், தென்னம்பட்டி, சேர்வைகாரன்பட்டி பகுதிகளிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

பொதுமக்கள் முகாம்களில் கலந்துகொண்டு பயனடைய வேண்டும்.

SCROLL FOR NEXT