ரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர்த்திருவிழாவின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல் லளவு கண்டருளினார்.
ரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர்த்திருவிழா மே 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங் கியது. இதைத் தொடர்ந்து தின மும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் கருட மண்டபத்தில் எழுந்தருளினார்.
இந்த விழாவின் 7-ம் திருநாளான நேற்று கொட்டாரத் தில் நம்பெருமாள் உபயநாச்சி யார்களுடன் எழுந்தருளி நெல் லளவு கண்டருளினார்.
தொடர்ந்து, இன்று வெள்ளிக் குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத் திலும் கருடமண்டபத்தில் எழுந்தருளுகிறார். கரோனா பரவல் காரணமாக நாளை (மே 9) சித்திரை தேரோட்டத்துக்குப் பதிலாக, அன்று காலை 6.30 மணிக்கு கருடமண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார். 10-ம் தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான மே 11-ம் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளுகிறார்.
இந்த விழாவுக்கான ஏற் பாடுகளை கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து தலைமையில் அலுவலர்கள், ஊழியர்கள் செய்துள்ளனர்.
சித்திரை தேர்த்திருவிழா நிகழ்ச்சிகளை https://srirangam.org என்ற இணையதளத்திலும், srirangam temple என்ற யூடியூப் சேனலிலும் பக்தர்கள் காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.