Regional01

கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வலியுறுத்தல் :

செய்திப்பிரிவு

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கரோனாதொற்றின் தாக்கம் நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது. அதிகரித்துவரும் நோயாளிகளை எதிர்கொள்ளும் அளவுக்கு அரசு மற்றும் அரசு சார்ந்த மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை.அரசு மருத்துவர்கள் சங்கங்களும் இதனை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றன.

அரசு மருத்துவமனைகளில் காலி பணியிடங்கள் போர்க்கால அடிப்படையில் விரைவாக நிரப்பப்பட வேண்டும். வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று தகுதி தேர்வை எழுதி வெற்றி பெற்றவர்களை உடனடியாக இன்டெர்ஷிப் ஆகபணியமர்த்த வேண்டும். வெளிநாடுகளில் மருத்துவப் படிப்புகள் முடித்து அனைத்து விதமான தகுதிகள் இருந்தும் இந்தியாவில் மருத்துவராக தொடர, தகுதித்தேர்வெழுதி வெற்றிபெற வேண்டும் என்பதால் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் காத்திருப்பில் உள்ளனர். இந்தஇக்கட்டான சூழலில் அவர்களை பயன்படுத்தி கொள்வதே சிறந்ததாக இருக்கும்.

மேலும் தன்னார்வலர்களாக பணிபுரிய விரும்பும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பும், போதிய ஊக்கத்தொகையும் வழங்கி, அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் போது அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். ஓய்வில்லாமல் தொடர்ச்சியாக பணியாற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தேவையான வசதிகள், உற்சாகமூட்டும் பயிற்சிகள், ஓய்வு அறைகள்போன்றவற்றை உடனடியாக செய்து தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT