திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அண்ணா நகரில் விநாயகர் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்து கோயில் மூடப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல், பூசாரி ராஜேஷ் கோயிலை திறக்க சென்றார்.
அப்போது கோயில் இரும்பு கதவு பூட்டு உடைக்கப் பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி யடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து தகவலறிந்த வேட்டவலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து உண்டியல் காணிக்கையை திருடிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.