கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சிப்காட் தேசிய ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனம் மற்றும் நஞ்சை ஊத்துக்குளி தனியார் ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனங்களில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, ஈரோடு மாவட்டத்திற்குத் தேவையான ஆக்சிஜனை தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என மின்வாரியத்துறை காண்காணிப்பு பொறி யாளருக்கு உத்தரவிட்டார்.
மேலும், பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் கூடுதலாக 100 படுக்கைகள் அமைப்பது குறித்தும் அதிகாரிகளிடம் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து ஆட்சியர் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 24 ஆயிரத்து 599 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, அதில் 21 ஆயிரத்து 10 பேர் குணமடைந்துள்ளனர்.
நேற்று கரோனா தொற்றால் 590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சிகிச்சை பெற்று வந்த 599 பேர் நேற்று குணமடைந்துள்ளனர், என்றார்.