இவர்கள் கடந்த 3-ம் தேதி பிரதீப் வீட்டுக்கு வந்து, அவரை அழைத்துச் சென்றனர். மறுநாளும் அவர்கள் வந்து, ரூ.11 ஆயிரம் மற்றும் பைக்கை பிரதீப் திருடியதாகக் கூறி, அவரை கொலை செய்வோம் எனவும், அவரது தந்தையிடம் மிரட்டிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் கே.புளியங்குளம் அருகே தனியார் தோட்டத்தில் பிரதீப் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இது தொடர்பாக தினேஷ்(25), கபிராஜா(27), பிரசாத்(24) ஆகியோரை போலீஸார் தேடினர். இந்நிலையில் இவர்கள் மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தனர். அவர்களை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.