சேலம் மாநகராட்சி மாநகர் பொறியாளராக பணிபுரிந்து வருபவர் அசோகன். இவர் மாநகராட்சியில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை தலைமை பொறியாளராக பணிபுரிந்தார்.
அந்த பணிக்காலத்தில், அவரது மனைவி பரிவாதினி மற்றும் தாய் பாக்கியம் பெயரில் வீடு, வீட்டுமனைகள், விவசாய நிலம் என பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் வாங்கி இருப்பதாக சேலம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு புகார் வந்தது.
புகாரின் அடிப்படையில், போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடியே 20 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக அசோகன் மற்றும் அவர் மனைவி பரிவாதினி, தாய் பாக்கியம் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.