தூத்துக்குடியில் வீடு புகுந்து பீரோவை உடைத்து நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார், அவரிடமிருந்து6 பவுன் நகை, ரூ.85 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி சாந்திநகரைச் சேர்ந்த மகாலிங்கம்மனைவி முத்துலெட்சுமி. இவர், கடந்த 19-ம் தேதிவீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். மீண்டும்திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு, ரூ.ஒரு லட்சம் மற்றும் 6 பவுன் செயின் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணை நடத்தினர். தூத்துக்குடி நகர டிஎஸ்பி கணேஷ் மேற்பார்வையில், தென்பாகம்காவல் நிலைய எஸ்ஐ வேல்ராஜ், தனிவிரல் ரேகைபதிவுக்கூட பிரிவு எஸ்ஐ முருகேஸ்வரி மற்றும் தலைமைக்காவலர் திருமுருகன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
விரல் ரேகை பதிவுக்கூட பிரிவினர் திருட்டு நடந்த வீட்டில் பதிவாகியிருந்த கை ரேகையை சேகரித்து ஆய்வு செய்ததில், அது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஜெயகணேஷ் மனைவி பேராட்சி செல்வி (27)யின் கைரேகை என்று நிரூபணமானது.
இதையடுத்து எஸ்ஐ வேல்ராஜ் தலைமையிலான தனிப்படையினர் பேராட்சி செல்வியிடம் விசாரணை நடத்தியதில் நகை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள 6 பவுன் நகை மற்றும் பணம் ரூ.85 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.