Regional01

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் - மீண்டும் மூடப்படுகிறது திருச்சி காந்தி மார்க்கெட் : ஜி கார்னர் செல்ல வியாபாரிகள் மறுப்பு

செய்திப்பிரிவு

கரோனா பரவல் தடுப்பு நடவடிக் கையாக திருச்சி காந்தி மார்க்கெட் இன்று (மே 7) முதல் மீண்டும் மூடப்பட்டு, பொன்மலை ஜி கார் னரில் செயல்படும் என மாவட்ட நிர் வாகம் அறிவித்துள்ளது. ஆனால், இதற்கு வியாபாரிகள் வழக்கம் போல எதிர்த்து தெரிவித்து வரு கின்றனர்.

கரோனா பரவல் தடுப்பு நட வடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் 30-ம் தேதி காந்தி மார்க்கெட் மூடப்பட்டு பொன்மலை ஜி கார் னர் மைதானத்தில் மொத்த விற் பனை நடைபெற்று வந்தது. பின் னர், 8 மாதங்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு நவ.27-ம் தேதி காந்தி மார்க்கெட் மீண்டும் திறக் கப்பட்டது. அதன்பின், கடந்த மாதம் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்த தையடுத்து, மாநிலம் முழுவதும் காய்கனி வணிக வளாகங்களில் சில்லறை வணிகத்துக்கு ஏப்.10-ம் தேதி முதல் தடை விதித்து அரசு உத்தரவிட்டது. இதையடுத்து பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் ஏப்.11-ம் தேதி முதல் சில்லறை வணிகம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஆனால், அப்போதும் பல்வேறு காரணங்களைக் கூறி ஜி கார்னருக்கு வியாபாரிகள் செல்லவில்லை.

இந்தநிலையில், கரோனா 2-வது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில், காந்தி மார்க்கெட்டில் தொடர்ந்து மக்கள் கூட்டம் அதிகளவில் இருப்பதும், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பெரும்பாலானோர் பின்பற்றாததும் தெரியவந்துள்ளதால், காந்தி மார்க்கெட் இன்று(மே 7) முதல் மூடப்படும் என்றும், அனைத்து வியாபாரிகளும் ஜி கார்னர் மைதானத்துக்குச் செல்லுமாறும் மாநக ராட்சி அலுவலர்கள் நேற்று அறிவு றுத்தினர். ஆனால், வழக்கம்போல இந்த முறையும் அங்கு செல்ல காந்தி மார்க்கெட் வியாபாரிகள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கூறும்போது, “கடும் வெயில் நிலவும் இந்தச் சூழலில், ஜி கார்னர் மைதானத்தில் பகலில் வியாபாரம் செய்வது இயலாத காரியம். அங்கு தற்காலிக கொட் டகை அமைக்கவும் ரயில்வே நிர்வாகம் அனுமதிக்கவில்லை. மேலும், போதிய கழிப்பிட வசதியும் இல்லை. இதுபோல பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், ஜி கார்னர் மைதானத்துக்குச் செல்ல முடியாது. காந்தி மார்க்கெட் டிலேயே தொடர்ந்து வியாபாரம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும். இல்லையெனில் வியாபாரமே செய்ய மாட்டோம்’’ என்றனர்.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “கரோனா வேகமாக பரவி வரும் நிலையில், ஜி கார்னர் செல்ல முடியாது, காந்தி மார்க்கெட்டில் அனுமதிக்காவிட்டால் வியா பாரத்திலேயே ஈடுபட மாட்டோம் என்று வியாபாரிகள் கூறுவது சரியல்ல. அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கையில் அனைத்துத் தரப்பினரின் பங்களிப்பும் அவசியம். எனவே, காந்தி மார்க்கெட் வியாபாரத்தை ஜி கார்னர் மைதானத்துக்கு மாற்றும் நடவடிக்கைக்கு வியா பாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT