Regional01

திருச்சியில் புதிதாக 746 பேருக்கு கரோனா தொற்று :

செய்திப்பிரிவு

மத்திய மண்டலத்துக்குட்பட்ட 8 மாவட்டங்களில் திருச்சியில் 746 பேருக்கு புதிதாக நேற்று கரோனா தொற்று உறுதி செய் யப்பட்டுள்ளது.

அரியலூரில் 88, கரூரில் 229, நாகப்பட்டினத்தில் 333, பெரம்பலூரில் 60, புதுக்கோட் டையில் 182, தஞ்சாவூரில் 165, திருவாரூரில் 269, திருச்சியில் 746 பேர் என மத்திய மண்டலத்தில் மொத்தம் 2,072 பேருக்கு புதிதாக கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் தஞ்சாவூர் 6, திருச்சி 5, கரூர் 4, நாகப்பட்டினம், புதுக்கோட்டை தலா 2, திருவாரூர் ஒருவர் என மொத்தம் 20 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

SCROLL FOR NEXT