Regional01

திருச்சி சரகத்தில் 4 மாவட்டங்களில் 6 அமைச்சர்கள் :

செய்திப்பிரிவு

திமுக அமைச்சரவையில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 6 பேர் இடம் பெற்றுள்ளனர்.

திருச்சி மேற்கு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவுக்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை வழங்கப் பட்டுள்ளது. இவர் 1988, 1996, 2006 திமுக அமைச்சரவையில் மின்சாரம், கூட்டுறவுத்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சராக பொறுப்பு வகித் துள்ளார். தற்போது 4-வது முறையாக அமைச்சராகிறார்.

திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏ மகேஷ் பொய்யா மொழிக்கு பள்ளிக் கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சி திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரான இவர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

கரூர் தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு மின்சாரம் மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வு துறை வழங்கப்பட்டுள்ளது. 2011-16 அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர். அதிமுகவிலிருந்து அமமுகவுக்கு சென்று 2018-ம் ஆண்டு திமுகவில் இணைந்த பின், 2019-ல் அரவக் குறிச்சி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள எஸ்.ரகுபதிக்கு சட்டத் துறை அமைச்சர் பதவி கொடுக் கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அதிமுக சார்பில் கடந்த 1991-96-ல் திருமயம் தொகுதியில் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற இவர், தொழிலாளர் நலத்துறை, வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக இருந்தார். அதன் பிறகு, திமுகவில் இணைந்த எஸ்.ரகுபதி, 2004-2009-ல் புதுக்கோட்டை மக்களவை தொகுதி உறுப்பினராக வெற்றிபெற்றதை யடுத்து, மத்திய உள்துறை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தார். அதன் பிறகு, கடந்த 2016-ல் திருமயம் தொகுதி எம்எல்ஏவாக இருந்தார்.

இதேபோன்று, ஆலங்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பின ராக வெற்றி பெற்றுள்ள சிவ.வீ.மெய்யநாதனுக்கு மாசுக்கட்டுப் பாட்டு வாரியம், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள் ளது. இதற்கு, முன்பு ஊராட்சித் தலைவர், அறந்தாங்கி ஒன்றியக் குழுத் தலைவராக இருந்துள்ளார்.

அதன்பிறகு, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர் 2-வது முறையாக இந்த தேர்தலிலும் வெற்றிபெற்றுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்துக்கு அதி முக ஆட்சியில் ஒரே நேரத்தில் 2 பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருந்தாலும்கூட, திமுக ஆட்சியில் ஒரே நேரத்தில் இருவருக்கு அமைச்சர் பதவி கொடுத்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் திமுக வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

பெரம்பலூர், அரியலூர் மாவட் டங்களை உள்ளடக்கிய குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எஸ்.எஸ்.சிவசங்கருக்கு, பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இவர், கடந்த 2006-ல் ஆண்டி மடம் தொகுதியிலும், 2011-ல் குன்னம் தொகுதியிலும் போட்டி யிட்டு வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2016-ல் அரியலூர் தொகுதி யில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். தற்போது குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள் ளார். இந்நிலையில், எஸ்.எஸ்.சிவசங்கருக்கு, அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது இரு மாவட்ட திமுகவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதைய டுத்து, திமுகவினர் நேற்று பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

SCROLL FOR NEXT