திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கோடை மழை நீடிக்கிறது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): குண்டாறு- 3, அடவிநயினார்- 5, ஆய்குடி- 3.8, தென்காசி- 1.2, செங்கோட்டை- 5, சங்கரன்கோவில்- 5, சிவகிரி- 2.
அணைகளின் நீர்மட்டம் (அடைப்புக்குள் உச்சநீர்மட்டம்) விவரம்:
பாபநாசம்- 101.80 அடி (143), சேர்வலாறு- 114.73 (156), மணிமுத்தாறு- 87.70 (118), வடக்கு பச்சையாறு- 42.73 (50), நம்பியாறு- 12.53 (22.96), கொடுமுடியாறு- 5 (52.25), கடனா- 66.70 (85), ராமநதி- 56.13 (84), கருப்பாநதி- 49.71 (72), குண்டாறு- 28.50 (36.10) மற்றும் அடவிநயினார்- 10.75 அடி (132.22).
நாகர்கோவில்
கடந்த 4 நாட்களாக பெய்து வரும் மழையால் மிதமான தட்ப வெப்பம் நிலவுகிறது. நேற்றும் மலையோரப் பகுதிகளில் சாரல் பொழிந்தது.
இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 136 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் நீர்மட்டம் 42 அடியாக உயர்ந்துள்ளது.
பெருஞ்சாணி அணைக்கு 146 கனஅடி தண்ணீர் வருகிறது. நீர்மட்டம் 54 அடியாக உயர்ந்துள்ளது. பொய்கையில் 17 அடி, மாம்பழத்துறையாறில் 14.60 அடி, சிற்றாறு ஒன்று அணையில் 6.53 அடி, சிற்றாறு இரண்டு அணையில் 6.63 அடி தண்ணீர் உள்ளது.
நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை நீர்மட்டம் 1.5 அடியாக உள்ளது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் போதிய நீர்இருப்பு உள்ளதால் கன்னிப்பூ சாகுபடியை மேற்கொள்ளும் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.