சேலம் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி இறுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக 108.9 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. அதன் பின்னர் வெயிலின் தாக்கம் குறைந்தபோதிலும், பெரும்பாலான நாட்கள் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெயில் பதிவானது.
இந்நிலையில், கோடை காலத்தின் உச்சகாலமான கத்திரி வெயில் தொடங்கிய நேற்று முன்தினம் 96.1 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. நேற்று 102.4 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.
நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், சாலைகளில் அனல் காற்று வீசியது. கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் குறைவாகவே வெயிலின் தாக்கம் இருந்த நிலையில், நேற்று திடீரென அதிகரித்ததால் மக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.