மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து, ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் பாஜக சார்பில் ஆர்ப்பாடம் நடந்தது 
Regional02

மேற்கு வங்க வன்முறைகளைக் கண்டித்து - ஈரோட்டில் 4 இடங்களில் பாஜக ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து பாஜக சார்பில் ஈரோடு மாவட்டத்தில் நான்கு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரின் வன்முறையினால், பாஜக தொண்டர்கள் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து ஈரோடு வீரப்பன்சத்திரத்தில், கிழக்குத்தொகுதி பாஜக சார்பில் ஆர்ப் பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் விவேகானந்தன், பாஜக பிரச்சார அணியின் முன்னாள் பொறுப்பாளர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதேபோல், ஈரோடு மேற்கு தொகுதி பாஜக சார்பில் அண்ண மார் பெட்ரோல் பங்க் அருகிலும், சென்னிமலையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மொடகுறிச்சியில் மாவட்டத் தலைவர் சிவ சுப்பிரணியன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி பங்கேற்றார்.

SCROLL FOR NEXT