சேலம் மாநகராட்சியில் அலுவலர்கள் மற்றும் ஊழியர் களுக்கு கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்க வில்லை. நிலுவை சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என ஊழியர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.
சேலம் கோட்டையில் மாநகராட்சி மைய அலுவலகத் தின் கீழ் அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அம்மாப்பேட்டை மற்றும் கொண்டலாம்பட்டி மாநகராட்சி மண்டல அலுவல கங்கள் இயங்கி வருகின்றன.
மாநகராட்சியில் பொது சுகாதாரத் துறை, பொறியாளர் பிரிவு, நகர திட்டப் பிரிவு, தெருவிளக்கு பராமரிப்பு பிரிவு, கணக்கு பிரிவு, கருவூலம் என பல்வேறு பிரிவுகளில் இளநிலை உதவியாளர்கள், தொழில்நுட்ப பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், உதவிபொறியாளர்கள், உதவி நிர்வாக பொறியாளர்கள், மேற் பார்வையாளர் கள், சுகாதார ஆய்வாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் வரை சம்பளம் வழங்கப்படவில்லை. இதே போல, தூய்மைப் பணியாளர் களுக்கும் 2 மாதம் சம்பளம் வழங்க வில்லை. இதனால், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் செலவுக்கு பணமில்லாமல் சிரமத்துக் குள்ளாகி வருகின்றனர்.
இது தொடர்பாக மாநகராட்சி அலுவலர்கள் கூறும்போது, “கரோனா பெருந்தொற்று பரவியுள்ள கால சூழ்நிலையில், ஒவ்வொரு அலுவலர்களும், அதிகாரிகளும் பொதுமக்களுக் கான அவசிய தேவை பணி களில் ஈடுபட்டு வருகிறோம். இதுபோன்ற சூழ்நிலையில், கடந்த பிப்ரவரி முதல் ஏப்ரல்வரை 3 மாதம் சம்பள வழங்க வில்லை.
எனவே, விரைந்து நிலுவை சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரனை தொடர்பு கொண்டு பதில்பெற முயன்றபோது அவர்அலைபேசியை எடுக் கவில்லை.