Regional01

திருச்சியில் தீ விபத்து; 3 கடைகள் எரிந்து சேதம் :

செய்திப்பிரிவு

திருச்சியில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் கார் உதிரி பாகங்கள் விற்பனை கடை உட்பட 3 கடைகள் எரிந்து சேதமடைந்தன.

திருச்சி ஒத்தக்கடை பகுதி பாரதிதாசன் சாலையில் கார் உதிரி பாகங்கள் விற்பனை கடை உள்ளது. இந்தக் கடை யில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் கரும்புகை வெளியேறி யது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் திருச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் வருவ தற்குள் மளமளவென தீ கடை முழுவதும் பரவிவிட்டது. மேலும், அருகில் உள்ள பேக்கரி மற்றும் ஆட்டோமொபைல் கடைகளுக்கும் தீ பரவியது. இந்த தீ விபத்தால் அந்தப் பகுதியே கரும் புகை மண்டலமாக மாறி யது. தகவலறிந்து வந்த திருச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள், போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கார் உதிரி பாகங்கள் கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின. மேலும், பேக்கரி மற்றும் ஆட்டோமொபைல் கடைகளிலும் சேதம் ஏற்பட்டது.

மின் கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக கன்டோன்மென்ட் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT