Regional03

9 இடங்களில் கரோனா பரிசோதனை மையம் : தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 9 இடங் களில் கரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரிவித்தார்.

தஞ்சாவூர் கரோனா சிகிச்சை மையம் மற்றும் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக மேற்கொள்ளப் பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து நேற்று ஆட்சியர் ம.கோவிந்தராவ் ஆய்வு செய்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தஞ்சாவூர் மாவட் டத்தில் கரோனா தடுப்புக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது, 2-வது அலை தாக்கம் அதிகமாக இருக்கிறது. மாவட்டத்தில் நாள்தோறும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பாதிக் கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் நல்ல சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற அரசு உத்தர வின்படி, படுக்கை வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை அவ்வப்போது அதிகப்படுத்தி வருகிறோம். இதேபோல, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை கள் இருப்பதை உறுதி செய்து வருகிறோம். மாவட்டத்தில் தற்போது 1,250 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உள்ளன.

வரும் நாட்களில் தேவை அதிகமாக வாய்ப்பு உள்ளது. எனவே, எங்கெங்கு படுக்கைகளை அதிகப்படுத்த வாய்ப்புகள் இருக்கிறது என்பதை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர், மருத்துவக் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் ஆய்வு செய்து வருகின்றனர்.

கரோனா தொற்று ஏற்பட்டால், அச்சப்பட வேண்டியதில்லை. மாவட் டத்தில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சுடர் மருத்துவமனை, திருவையாறு, பாபநாசம், ஒரத்தநாடு, கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய அரசு மருத்துவமனைகள், கும்பகோணம் கரோனா சிகிச்சை மையம், பட்டுக்கோட்டை கரோனா சிகிச்சை மையம் ஆகிய 9 இடங்களில் பரிசோதனை மையங் கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கரோனா தொற்று உறுதி யானவர்கள் அருகிலுள்ள மையத்துக்குச் செல்லலாம். அங்கு அவர்களுக்கு ரத்த அழுத்தம், இணை நோய் இருக்கிறதா என அடிப்படை பரிசோதனைகள் செய்யப்படும். இப்பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையை படிப்படியாக 14, 20 என உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகி றதா என்பதைக் கண்காணிக்க மருத்துவப் பணிகள் இணை இயக்குநர், உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

கூடுதல் கட்டணம் குறித்து புகார் வந்தால், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

SCROLL FOR NEXT