பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து ஆயுள் சிறை தண்டனை கைதி தப்பியோடிவிட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் தோப்பூரை சேர்ந்தவர் கோவிந்தராஜன் (34). கடந்த2006-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் இவருக்குஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பாளையங்கோட்டை மத்திய சிறையில் அவர் அடைக் கப்பட்டிருந்தார்.
சிறை வளாகத்தில் கோவிந்தராஜனும், சக கைதிகளும் நேற்று தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோவிந்தராஜனை திடீரென்று காணவில்லை. சிறையிலிருந்து அவர் தப்பியது தெரியவந்தது. பெருமாள்புரம் போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸாரும், சிறைத்துறையினரும் அவரை தேடி வருகிறார்கள்.