Regional01

புதுக்குடி கோயிலில் திருட்டு முயற்சி :

செய்திப்பிரிவு

வீரவநல்லூர் அருகே புதுக்குடியில் மாயப்பெருமாள் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் பூஜைகள் முடிந்தபின் கோயிலை பூட்டிச் சென்றிருந்தனர். நேற்றுகாலையில் கோயில் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வீரவநல்லூர் போலீஸார் அங்குவந்து பார்வையிட்டனர். கோயிலில் இருந்த உண்டியல் காணாமல் போயிருந்தது. அதை அப்பகுதிகளில் தேடியபோது, சாலையோரத்தில் வீசப்பட்டிருந்ததை கண்டு பிடித்தனர். உண்டியல் உடைக் கப்படாமல் இருந்தது. கோயில் உண்டியலை திருடியவர்கள், அதை உடைக்கமுடியாமல் சாலையோரத்தில் வீசி சென்றுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். அந்த நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT