திருநெல்வேலி அருகே கங்கை கொண்டான் ரயில் நிலையத்தில் முதன்முறையாக கோதுமை மூடைகள் இறக்கப்பட்டன.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலைய பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, கங்கைகொண்டான் ரயில் நிலையத்தில் கூடுதலாக ஒரு ரயில்வே சரக்கு நிலையம் ஏற்படுத்தப்பட்டது. இந்த சரக்கு நிலையத்தில் முதன்முதலாக சரக்கு ரயிலில் இருந்து கோதுமை மூடைகள் இறக்கப்பட்டன. கோவில்பட்டி லட்சுமி மாவு மில்லுக்கு வடகிழக்கு ரயில்வே லக்னோ கோட்டம் கோண்டா கச்சாஹ்ரி என்ற ரயில் நிலையத்தில் இருந்து வந்த 1,300 டன் கோதுமை மூடைகள் கையாளப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.