தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் அறிக்கை: இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலைதூத்துக்குடியில் ரூ.873.50 ஆகவும், கோவில்பட்டியில் ரூ.872 ஆகவும், கழுகுமலையில் ரூ.880.50 ஆகவும், கயத்தாறில் ரூ.883.50 ஆகவும், எட்டயபுரத்தில் ரூ.872 ஆகவும், சாத்தான்குளம் பகுதிக்கு ரூ.890.50 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பாரத் பெட்ரோலியம் நிறுவனவீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை தூத்துக்குடியில் ரூ.873.50 ஆகவும், வைகுண்டத்தில் ரூ.874 ஆகவும், குளத்தூரில் ரூ.874.50 ஆகவும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ.873.50 எனவும், 01.05.2021 முதல் எரிவாயு நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, நுகர்வோர்கள் எரிவாயு முகவர்களிடமிருந்து வாங்கும் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டருக்கு அதிக பணம்செலுத்த தேவையில்லை. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.