Regional03

ஜவுளிக்கடையில் திருடிய 5 பெண்கள் கைது :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், கடையத்தில் ஜோசப் ஸ்டாலின் (62) என்பவர், ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு சேலை வாங்க சில பெண்கள் வந்துள்ளனர். அவர்கள் சென்ற பின்னர், சில சேலைகள் காணாமல் போனது தெரியவந்தது. கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தபோது, சேலைகளை ஒரு பெண் திருடிச்சென்றது தெரிய வந்தது.

சற்று நேரத்தில் அந்தப் பெண் உட்பட மேலும் 4 பெண்கள், அவரது ஜவுளிக்கடைக்கு மீண்டும் வந்துள்ளனர். அவர்கள் மீண்டும் சேலைகளை திருட முயன்றபோது, பொதுமக்கள் உதவியுடன் கையும் களவுமாக பிடித்து கடையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் அவர்கள், தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் பகுதியைச் சேர்நத லெட்சுமி (42), பார்வதி (40), நம்பிக்கண்ணு (50), சுப்பம்மாள் (70), ஆச்சியம்மாள் (75) என்பது தெரியவந்தது. இந்த 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT