திருப்பூரில் கரோனா சிகிச்சைக்கு 42 சதவீத படுக்கைகள் கைவசம் இருப்பு உள்ளதாக, சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, "திருப்பூரில் 494 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர் மற்றும் கோவையிலுள்ள அரசு, தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கரோனாவால் பாதிக்கப்பட்டு கோவையில்உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருப்பூரை சேர்ந்த 63 வயது ஆண் உயிரிழந்தார்.
தற்போது, மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 244-ஆகஉயர்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப் படுகிறவர்கள் சிகிச்சை பெறும் வகையில் 1,535 படுக்கைகள் தயார் நிலையில்உள்ளன. இதில், நேற்று வரை 58 சதவீதம் கரோனா படுக்கைகள்நிரம்பியுள்ளன. 42 சதவீதம் படுக்கைகள் கைவசம் இருப்பு உள்ளன.
எனவே பொதுமக்கள் அச்சமின்றி சிகிச்சை பெறலாம். அறிகுறி இருக்கிறவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனை மற்றும்ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ளலாம்" என்றனர்.