நீலகிரி மாவட்ட அமலாக்கத் துறைஉதவி ஆணையர் சதீஷ்குமார் கூறும்போது, "நீலகிரி மாவட்டம் குன்னூர், உதகை ,கோத்தகிரி, கூடலூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள நகைக்கடைகளில் எடைதராசுகள் தொழில்துறை சார்பாக சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தராசு முத்திரைகள், பார்வையாளர்கள் பார்க்கும் வசதியில் உள்ளதா, சோதனை அளவீடு இருக்கின்றதா என சோதனை செய்யப்பட்டது. இதில் 7 கடைகளில் உரிய சான்றிதழ் இன்றி எடை கற்கள் இல்லாததால், தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. மீண்டும் இதே நிலை தொடர்ந்தால் இரண்டு மடங்காக அபராதம்உயர்த்தப்படுவதுடன், நீதிமன்ற வழக்கு தொடரவும் நேரிடும்" என்றார்.