Regional03

உதகை உழவா் சந்தை இடமாற்றம் :

செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்ட ஆட்சியா் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

நீலகிரி மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை, வேளாண்வணிகத் துறையின் கட்டுப்பாட்டில் சேரிங்கிராஸ் பகுதியில் உழவா் சந்தை செயல்பட்டு வருகிறது. தற் போது கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாக மைதானத்துக்கு உதகை உழவர் சந்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் போதிய இடைவெளியைக் கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் செயல்படவுள்ள உழவா் சந்தைக்கு வந்து பயன்பெறலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT