Regional01

மதுரையில் வெவ்வேறு விபத்துகளில் : தென்காசி இளைஞர் உட்பட 3 பேர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம் (45). இவர் கடந்த மே 3-ம் தேதி தனது பைக்கில் ரெட்டியபட்டி- விக்கிரமங்கலம் சாலையில் சென்றார். அரச மருதுபட்டி மந்தையம்மன் கோயில் அருகே சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து பைக்கில் இருந்து தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து விக்கிரமங்கலம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

தென்காசி மாவட்டம், சிவகிரி தேவிபட்டினத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் (30). இவரது மனைவி அய்யம்மாள், இவரது மாமியார் திலகம். இவர்களது உறவினர்கள் சங்கர் - பிரேமாதேவி தம்பதி. இவர்களின் குழந்தைக்கு உடல் நிலை பாதித்த நிலையில், கடந்த 3ம் தேதி மதுரை பாண்டிக்கோயில் சந்திப்பு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்துவிட்டு, மீண்டும் காரில் ஊருக்குத் திரும்பினர். காரை சங்கர் ஓட்டினார். ராஜபாளையம் அருகே திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தங்கராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திலகம், பிரேமதேவி ஆகியோர் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். விபத்து குறித்து டி. கல்லுப்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT