Regional01

முன்விரோதத்தில் : வழக்கறிஞர் வீட்டுக்கு தீ வைப்பு :

செய்திப்பிரிவு

விருதுநகர் அருகே வடமலைக் குறிச்சியைச் சேர்ந்த வழக் கறிஞர் மணிமாறன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாலன் என்பவருக்கும் 11 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்தது. இருதரப்பினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு பாலன் சிறையில் உள்ளார். வழக்கறிஞர் மணிமாறன் குடும் பத்துடன் வெளியூரில் வசித்து வருகிறார். இந்நிலையில், வடமலைகுறிச்சியில் உள்ள மணிமாறனின் வீட்டுக்கு மர்ம நபர்கள் நேற்று தீ வைத்தனர். அதே வேளையில் அவரது ஆதரவாளர் தங்கப்பாண்டியன் என்பவரை ஒரு கும்பல் வழி மறித்து தாக்கியது. ஆமத்தூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT