Regional02

மாடியிலிருந்து விழுந்தவர் மரணம் :

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகா வெள்ளயம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் ஆறுமுகம் (55). இவர் ராமநாதபுரம் பொதுப்பணித் துறையில் குழாய்கள் பழுது நீக்கும் வேலை செய்து வந்தார்.

பேராவூர் பகுதியில் உள்ள மாடி வீட்டில் தனது உறவினருடன் தங்கி இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த ஆறுமுகம் உயிரிழந்தார். கேணிக்கரை போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT