வத்திராயிருப்பு பகுதியில் கன மழையால் நீரில் சாய்ந்துள்ள நெற்பயிர்கள். 
Regional02

வத்திராயிருப்பில் கனமழை - நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் :

செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டம் வத்திராயி ருப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள கூமாப்பட்டி, கான்சாபுரம், ரகுமத் நகர், மகாராஜபுரம் ஆகிய பகுதி களில் தென்னைக்கு அடுத்த படியாக நெல் விவசாயமே பிரதானமாக நடைபெறுகிறது. ஏற்கெனவே பெய்த வடகிழக்குப்பருவ மழை காரணமாக அணைகள், கண்மாய்கள் நிரம்பி உள்ளன. இந்த நீரை நம்பி விவ சாயிகள் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந் தனர். இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக கடந்த 2 நாட்களாக விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. குறிப்பாக வில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கன மழையால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற் கதிர்கள் நீரில் மூழ்கி சாய்ந்தன.

SCROLL FOR NEXT