ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சி வைகை நகரைச் சேர்ந்தவர் மாரி யப்பன்(60). ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர். இவர் கடந்த 2-ம் தேதி தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அவரை சேர்த்துள்ளார். நேற்று முன்தினம் பிற்பகலில் மாரியப்பன் வீட் டுக்கு வந்தார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 24 பவுன் நகைகள், ரூ.1.10 லட் சம் திருடப்பட்டதாகப் புகார் அளித்துள்ளார்.