சேலம் மாவட்டத்தில் நேற்று 624 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 585 பேருக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதில், சேலம் மாநகராட்சி பகுதியில் 378 பேரும், ஆத்தூர் நகராட்சியில் 25, வட்டார அளவில் வாழப்பாடி 21, வீரபாண்டி 20, ஓமலூர் 20, சேலம் வட்டாரத்தில் 12, சங்ககிரி 17, அயோத்தியாப்பட்டணம்19, காடையாம்பட்டி 13, மேச்சேரி 12 உட்பட மாவட்டம் முழுவதும் 624 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 455 பேர், குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 3,801 ஆக அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 29 ஆயிரத்து 21 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 23,388 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 19,802 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று 585 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 571 பேர் குணமடைந்துள்ளனர். 3419 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 61 வயது முதியவர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
மாவட்டம் முழுவதும், 2430 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், 110 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள 8800 பேர் கண்காணிப்பில் உள்ளனர். கடந்த 3-ம் தேதி வரை மாவட்டத்தில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 397 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி பவானியில் செயல்பட்ட வங்கி மற்றும் இறைச்சிக்கடைக்கு தலா ரூ.5000 அபராதம் விதித்து ஆட்சியர் உத்தரவிட்டார்.